Wednesday, November 14, 2007

பெண்தோழி!

தோழியே! உன்னை என் நண்பனோடு
இணைத்து கிசுகிசு பேசி கிண்டலடித்தது
இன்றும் பசுமையாக என் நினைவுகளில்...

சில நாட்களில் கிசுகிசுத்த வாய் சற்றே அடங்கியது
ஆனால் என் கண்கள் மெல்ல மெல்ல
உன்னை பார்க்க தொடங்கியது ...

பெண்களிடம் அதிகம் பேசாத நான் உன்னிடம்
ஒவ்வொரு நொடியும் பேச துடித்தேன்...
பேசவில்லை நான், காரணங்கள் பற்பல,
அவற்றில் துணிவின்மை, வறட்டு கவுரவம்...
இவற்றிக்கு முதலிடம்...

பிறகு நிகழ்ந்தொரு அதிசயம்...
உன் கண்கள் என்னைப் பார்த்து சிரிக்க தொடங்கியன..
என் கண்கள் பதில் பேச துடித்தன..

கண்களில் ஆரம்பித்த சிநேகம்,
புன்னகையாக பூத்து தினமும்
வாழ்த்துகள்/வணக்கங்கள் பரிமாறி கொள்வதில் வளர்ந்தது...
இனி இருவரும் காலமெல்லாம் சிநேகம் கொள்ள வேண்டும் என்று எண்ணிய வரை...

ஆஹா.. என்னொரு இனிமையான உணர்வுகள்...
அழகான தருணங்கள்...
வாழ்கையில் ஒவ்வொரு மனிதனும்
ரசித்து அனுபவிக்க வேண்டியவை....

உன்னிடம் பேசிய பிறகுதான் என்னை
நான் அடையாளம் கண்டு கொண்டேன்...
பகிர்ந்து கொண்டது சில காலமே என்றாலும்
இருவரும் மகிழ்ச்சின் எல்லை வரை சென்று வந்தோம்..

பிறகு அல்லவா, கிளம்பியது பூதம் என்னுள்...
வயது கோளாறு அல்லவா...
பல சந்தேகங்கள் என்னுள்...
நீ என் மேல் சிநேகம் கொண்டுள்ள காதலியா? அல்லது,
நான் உன்மேல் காதல் கொண்டுள்ள சிநேகிதனா? என்று…

ஞாபகம் இருக்கிறதா?
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பம்...
நீட்டினாய் என்னிடம் உனது "ஆட்டோகிராப்"...
ஒரு நாள் அவகாசம் வாங்கி...
மனதை நிரப்பினான் முழுவதும் உனது ஏட்டினில்..

படித்தப்பின் கடிதம் ஒன்று கொடுத்தாய்,
என் மனதை நிரப்பியதற்கு..
படித்தபின் அல்லவா தெளிந்தேன்...
நாம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்தது
காதலையும் விட மிக உயர்ந்த பந்தம் "நட்பு" என்று...

நாம் இருவரின் இதயத்திலும் ஒருவருக்கொருவர்..
என்றென்றும் நீங்க இடம் பிடித்திருப்பது என்பது,
நிசப்பதமான உண்மையாகும்..

என்றும் நீ உன் நண்பர்களிடம்...
"இவன்தான் என் முதல் உயிர் தோழன்" என்றும்,
நான் என் நண்பர்களிடம்...
"இவள்தான் என் முதல் உயிர் தோழி" என்றும்,
அறிமுகம் செய்விகையில்... கிடைக்கின்ற
மகிழ்ச்சி ஈடு இணையற்றது!!

--- உன்னுயிர் தோழன்

2 comments:

Miss Iyer said...

Argh! I cant read that. But I'm sure it was a profound poem Uto!

Hope you had a bright and joyous festival! :)

Utopianb said...

Thanks G3! Were you not able to see the tamizh font?

I did enjoy the fest and had a rare 5 days off from work :)